For those who:
- Needs encouragement
- Have prayer requests
- Desire to get closer to God.
- Desire for prayer association for your ministry

lighthouse (Peggy's Cove, east coast Canada).
privacy Policy
அந்த இரட்சகருடைய அழைப்பு… The Saviour’s Call — Tamil

[Français] | [English] | [Español] | [Yoruba] | [Deutsch]
 [ខ្មែរ។] | [தமிழ்] | [বাংলা] | [Italiano] | [తెలుగు]

இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம்,
இப்பொழுதே இரட்சணிய நாள்
II கொரிந்தியர் 6:2

அவருடைய நித்திய அழிப்பான்
“தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.” (சங்கீதம் 51:1) (NIV)

நான் கீபோர்ட்டில் பேக்ஸபேஸ் பொத்தானை அழுத்தினபொழுது, நான் அச்சிட்ட வார்த்தைகள் அனைத்தும் என்னுடைய கண்களுக்கு முன்பாக மறைந்துபோயின. நான் நினைத்தேன், “ஓ இல்லை, நான் என்ன செய்துவிட்டேன்! அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்த வார்த்தைகள் அனைத்தும் என்றென்றுமாக போய்விட்டது.” நான் சொன்னது போல எனக்குள்ளே தொடர்ந்து பேசிக்கொண்டேன், “அந்த வாக்கியத்தை நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று நான் மகிழ்ச்சியடைகிறேன்.” அதன்பிறகு ஒரு எண்ணம் எனக்குள் உதித்தது… அப்படியாகத்தான் தேவன் நம்முடைய தவறுகளை அழித்துவிடுகிறார். அவர் அந்த இடைவெளி பொத்தானை மெதுவாக தொடுகிறார் அவைகள் போய்விடுகின்றன, மறுபடியுமாக அதைத் திரும்ப ஒருபோதும் கொண்டுவரமுடியாது.

தேவன் இதே காரியத்தை செய்கிறார் என்று அறிந்து கொள்ளும்போது இது ஒரு ஆறுதலாக இருக்கிறது, அதுபோல, அவர் தம்முடைய ஜீவ புத்தகத்தில், எழுதுகிறார். நம்முடைய வாழ்நாள் முழுவதும் கவனமாக அவருடைய புத்தகத்தில், பதிவு செய்யப்படுகிறது. அவர் நம்முடைய பாவங்களை அழித்துப்போடுகிறார் அதன்பிறகு அவைகளை ஒருபோதும் நினைப்பதில்லை, என்று நமக்குச் சொல்லப்பட்டது. நான் நினைத்துப் பார்க்கிறேன், நான் எனது பாவத்துக்கு மன்னிப்பைக் கேட்டபொழுது, அவர் தம்முடைய விரல் நுனியை, இடைவெளி பொத்தான்மீது வைக்கிறார், அதை கவனமாக அழித்துவிடுகிறார். தேவனுடைய கரத்தில் தாமே அது உடனடியாக அழிக்கப்பட்டது.

நமது பாவத்தை அழிக்கும் மற்ற பகுதியாகிய தேவனுடைய நீக்கம் நம்முடைய பங்காகும். தேவனுடைய பார்வையிலிருந்து அந்தப் பாவங்களை அவர் ஒருதரம் அழித்துவிட்ட பிறகு, நம்முடைய மனதிலிருந்து அவைகளை நாம் அழிக்க வேண்டியது அவசியமாகும். அந்த நலமில்லாத குற்றமுள்ள மற்றும் ஆக்கினைக்குட்பட்ட நினைவுகளை நாம் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தேவன் விரும்புவதில்லை. நம்மை மன்னிக்கும்படி நாம் அவரிடம் கேட்டால், அது செய்யப்பட்டுவிட்டது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய ஆத்துமாவின் சத்துரு அதைப் பற்றி பிடிக்கும்படி செய்கிறான், அதைச் செய்வது தேவன் அல்ல என்பதை நான் கற்றுக்கொள்ளும்வரையிலும் அநேக நேரங்களில் நான் மன்னிக்கப்படாததாக உணர்ந்ததை நான் நினைவு கூறுகிறேன்… அது கடவுள் அல்ல.

இதுவரையிலும் நீ பிடித்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு தேவையில்லாத குற்ற உணர்வில் இருந்தும் உன்னை நீயே விடுவித்துக்கொள். நம்முடைய பாவத்தைத் தேவன் அழித்துவிட்டார் என்பதை நீ நினைவில் வைத்துக்கொள். அவர் கவனமாக தமது விரல்களைப் பின் இடைவெளி பொத்தான் மீது வைத்து, உன்னுடைய அக்கிரமங்களை அழிப்பதைப் பார். அதன்பிறகு, அவர் தம்முடைய நித்திய அழிப்பானை உபயோகப்படுத்தியதற்காக, அவருக்கு நேரம் கொடுத்து, நன்றி செலுத்து.

AnnetteeBudzban ahrtwrites2u@aol.com

இரட்சிப்புக்காக அழைப்பு:

உலகத்திலுள்ள மதங்களெல்லாம் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கிறது என்று இந்த உலகத்தின் ஞானம் நம்மை விசுவாசிக்கும்படி செய்கிறது, அதாவது எல்லா சாலைகளும் பரலோகத்துக்குச் செல்கின்றன, நாம் யாரை அல்லது என்ன விசுவாசித்தாலும் கவலையில்லை. ஆனால் இது உண்மையாக இருக்குமா?

இயேசுவானவர் சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” யோவான் 14:6.

அப்போஸ்தலர் 4:12 சொல்லுகிறது “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”

இன்று, எனது நண்பர்களே, நான் மிகவும் அப்பட்டமாக சொல்ல வேண்டியது அவசியமாகும். உன் இருதயத்தில் இயேசுவானவர் இல்லையானால், நீ இரட்சிக்கப்பட முடியாது! இயேசுவானவர் இல்லாவிட்டால், அங்கே இரட்சிப்பு இல்லை. காலவட்டம். நான் வருந்துகிறேன்! ஆனால் யாராவது உன்னை போதுமான அளவு நேசித்து இதைச் சொல்ல வேண்டும், மற்றும் இன்று, அந்தச் சத்தியத்தை உனக்குச் சொல்ல நான் ஈடுப்படுத்தப்பட்டிருக்கிறேன்.


“ஆனால்,” நீ சொல்லுகிறாய், “நான் ஏற்கனவே ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்! நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து எழுப்பப்பட்டவன். நாங்கள் பௌத்தர், முகமதியர், யூதர் அல்லது இந்து அல்ல – மற்றும் நாங்கள் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் நாட்களில் சபைக்குப் போகிறோம், அதனால் நாங்கள் கிறிஸ்தவர்கள்!”

உனக்குத் தெரியுமா வேதாகமம் இதைச் சொல்லவில்லை – எங்கேயும் – நீ ஒரு கிறிஸ்தவனாக அழைத்துக்கொண்டால் பரலோகம் மற்றும் நித்திய ஜீவனை பெற்றுவிட முடியும் என்று வேதாகமத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்பது உனக்குத் தெரியுமா?

“சரி,” உன்னுடைய பதில், “ஆனால் நான் கிறிஸ்தவ பாரோசியல் பள்ளிக்குச் சென்றேன். கேட்டாசியம் வகுப்புகளில் நான் கலந்துக்கொண்டேன் (அல்லது ஓய்வுநாள் பள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்புகள்) என் வாழ்நாள் முழுவதும் பங்குபெற்றேன். நான் ஒரு சிலுவையை (அல்லது ஒரு பரிசுத்த கிறிஸ்டோபர்) என் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கிறேன்!”

அது குளிர்ச்சியானது, ஆனால் கேட்டாசியம், ஒய்வுநாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்புகளுக்குச் செல்லுவது, அல்லது உன்னுடைய கழுத்தைச் சுற்றிலும் பரிசுத்த கிறிஸ்டோபர் சிலுவையை அணிந்து கொள்ளுவதன் மூலமாக நீ பரலோகம் மற்றும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று வேதாகமம் சொல்லுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

“நல்லது… நான் ஒவ்வொரு நாளும்… வேதம் வாசிக்கிறேன் மற்றும் நான் ஜெபம் செய்கிறேன்!”

நீ அப்படி செய்வதற்காக நான் மெய்யாகவே மகிழ்ச்சியடைகிறேன்! அப்படி செய்தாலும், ஜெபம் மற்றும் வேத வாசிப்பினால் மட்டுமே நீ பரலோகத்துக்குப் போக முடியாது மற்றும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று வேதாகமம் சொல்கிறது!

“சரி. ஆனால் நான் தேவனை நேசிக்கிறேன்!”

அது திகிலுட்டுகிறது. செப்டம்பர் 11, 2001, அன்று உலக வியாபார மையம் மற்றும் அந்தப் பென்டகம் மீது ஆகாய விமானத்தை மோதி அழிவு செய்த 19 பயங்கரவாதிகளும் சொன்னார்கள் அவர்கள் தேவனை நேசித்தார்கள் என்பது உனக்குத் தெரியுமா?

நீ தேவனை நேசிப்பதால் மட்டுமே பரலோகத்துக்குப் போக முடியும் மற்றும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று வேதாகமம் சொல்லவில்லை என்பது உனக்குத் தெரியுமா?


“ஆனால் ஒருமுறை ஒருவர் என்னிடம் சொன்னார் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசித்தால், நான் பரலோகத்துக்குப் போக முடியும் மற்றும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்…”

நான் மறுபடியுமாக அப்பட்டமாக இருக்கலாமா? பிசாசுகளும் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கின்றன என்று வேதாகமம் சொல்லுகிறது (யாக்கோபு 2:19), மற்றும் சாத்தானும் இயேசுவானவரைத் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறான்! பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் ஒரு அக்கினிக்கடலை இயேசுவானவர் அயத்தப்படுத்தி இருக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது (மத்தேயு 25:41)! இயேசுவானவரில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை பரலோகத்தில் நித்திய ஜீவனை அவர்களுக்கு நிச்சயமாக கொடுக்க முடியாது!

“ஆனால் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் பத்துக் கட்டளைகள் அனைத்தையும் கைக்கொண்டு வருகிறேன்!”

அது பெரிய காரியம்! ஆனால் பத்துக் கட்டளைகளைக் கைக்கொள்ளுவது நித்திய ஜீவனைக் கொடுக்க முடியும் என்று வேதாகமம் சொல்லவில்லை என்பது உனக்குத் தெரியுமா? எனது நண்பர்களே, இது எளிமையாக இந்தப் புத்தகத்தில் இல்லை!

நாம் சில நிமிடங்களுக்கு நிக்கோதேமுவின் கதையைக் கவனிப்போம். நிக்கோதேமு ஒரு பரிசேயனாக இருந்தான், நியாயப் பிரமாணத்தைக் கடினமாக கடைப்பிடிப்பவனாக இருந்தான். அவன் வேத வசனங்களை மனப்பாடம் செய்தான், வேத பாடல்களைப் பாடினான் மற்றும் தேவ வார்த்தையை ஜெப ஆலயங்களில் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் போதனை செய்தான். ஒருவர் நினைத்திருப்பார் அதாவது நிக்கோதேமு இயேசுவாவரிடம் வந்தபொழுது, கர்த்தர் அவனுடைய முதுகில் தட்டிக்கொடுத்து சொன்னார், “நல்லது செய்தாய், நிக்! பரலோகம் உனக்காக காத்திருக்கிறது!”

ஆனால் நிக்கோதேமுவிடம் கர்த்தர் சொன்னது அப்படியாக இல்லை. அதற்குப் பதிலாக, அவர் நிக்கோதேமுவிடம் அவன் ஜலத்தினாலும் மற்றும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று சொன்னார்.

அவர் நிக்கோதேமுவிடம் சொன்னார், “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” (யோவான் 3:3). இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது? நீ பரலோகத்துக்குச் செல்ல வேண்டுமானால் மற்றும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நீ மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம் என்பது இதன் பொருளாகும்!

அப்படியானால் மறுபடியும் பிறப்பது என்றால் அதன் அர்த்தம் என்ன?

நீ இயேசுவானவருக்கு உன்னுடைய இருதயம் முழுவதையும் மற்றும் உன்னுடைய வாழ்க்கை முழுவதையும் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்பது இதன் பொருளாகும். இது எளிமையானது! நீ இதுவரையிலும் ஒருபோதும் இதைச் செய்யவில்லையானால், நீ இரட்சிக்கப்படவில்லை. (மறுபடியும், நான் வருத்தப்படுகிறேன்! ஆனால் யாராவது ஒருவர் உன்னை போதுமான அளவு நேசித்து உனக்குச் சொல்ல வேண்டும்.)

ஆதியாகமம் 1:1லிருந்து இந்தப் புத்தகத்தின் வரைப்படங்கள் மற்றும் பின்பக்கம் வரையிலும், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் மாறாததாகும்! நீ உன்னுடைய இருதயம் முழுவதையும் மற்றும் உன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தேவனுக்குக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதன்பொருள் இயேசுவானவர் உன்னுடைய வாழ்க்கையின் கர்த்தராக இருக்க வேண்டியது அவசியமாகும். அவரை உன்னுடைய எஜமானாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்! உன்னுடைய வாழ்க்கையின் எஜமானாக அவரை நீ ஒருபோதும் ஆக்கவில்லையானால், நீ இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அது இவ்வளவு எளிமையானது.


“ஆனால் நான் ஒரு பில்லி கிராகம் சிலுவைப் போரில் (அல்லது ஒரு அறுவடை சிலுவைப் போரில்) அந்த இரட்சிப்பின் ஜெபத்தை செய்தேன்! நான் ஒரு மறு அழைப்புக்கு என்னுடைய சபையில் ஒருதரம் ஒப்புக்கொடுத்தேன்!

அது பெரிய காரியம்! ஆனால் உன்னுடைய வாழ்க்கையில் அந்த ஜெபத்தைப் பின்பற்றுகிறாயா?

ஒரு ஜெபத்தை செய்வது உன்னை பரலோகத்துக்குக் கொண்டு போகும் என்று வேதாகமத்தில் எங்கும் சொல்லவில்லை என்று உனக்குத் தெரியுமா?

நிச்சயமாக, ஜெபம் முக்கியமானதுதான், ஆனால் அந்த ஜெபத்தைச் செய்தபொழுது நீ உன்னுடைய முழு இருதயத்தையும் மற்றும் வாழ்க்கை முழுவதையும் அவருக்குக் கொடுத்தாயா? அவரை உன்னுடைய வாழ்க்கையின் எஜமானாக மாற்றிக்கொண்டாயா? அல்லது இது ஏதோ சில “தீ காப்பீடு” போன்று உனது வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து நரகத்துக்குப் போவோம் என்ற பயமில்லாமல் உன் பிரியத்தின்படி வாழசெய்கிறதா?

நான் உனக்கு சிலவற்றைச் சொல்லலாமா? அது அந்தவிதமாக வேலை செய்யாது. இது ஒன்று முழுவதுமாக தேவனோடு உறவாக இருக்க வேண்டும் அல்லது ஒன்றும் இருக்காது. நீ உன்னுடைய முழு இருதயத்தையும் மற்றும் வாழ்க்கை முழுவதையும் அவருக்குக் கொடுக்க வேண்டும், மற்றும் அவரை உன்னுடைய வாழ்க்கையின் எஜமானாக மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் நீ இரட்சிக்கப்படவில்லை! (யாராவது ஒருவர் உன்னை போதுமான அளவு நேசித்து உனக்குச் சத்தியத்தைச் சொல்ல வேண்டும்.)

எனது நண்பர்களே, உங்களை நீங்களே சோதனை செய்துகொள்ள இப்பொழுது நேரம் வந்திருக்கிறது! இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும். சிறிது நேரத்தில், நீங்கள் தேவனோடுகூட சரிசெய்துகொள்ள நான் உங்களுக்குத் தருணம் கொடுக்கப்போகிறேன், அவருக்கு உன்னுடைய முழு இருதயத்தையும் மற்றும் உனது முழுவாழ்க்கையையும் கொடுக்க, மற்றும் பரலோகத்தில் நித்திய ஜீவனின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள தருணம் கொடுக்கப்போகிறேன்.


“இந்த அழைப்புக்கு யார் மறு உத்திரவு கொடுக்கப்போகிறார்கள்?”

உங்களைச் சில கேள்விகள் கேட்டு அதற்கு நான் பதில் சொல்ல போகிறேன்:

இயேசுவானவருக்கு எப்போதாவது உன்னுடைய முழு இருதயத்தையும் மற்றும் உனது முழு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறாயா? இல்லை என்றால், இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

இயேசுவானவரை எப்போதாவது உன்னுடைய வாழ்க்கையின் எஜமானாக ஏற்றுக்கொண்டாயா? இல்லை என்றால், இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

உன்னுடைய வாழ்க்கையை உனக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறாயா மற்றும் இயேசுவானவருக்காக வாழவில்லையா? அப்படி என்றால், இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

நீ தேவனிடம் வருவதற்கு பதிலாக தேவனிடமிருந்து விலகி ஓடிக் கொண்டிருக்கிறாயா? அப்படி என்றால், இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

நீ இயேசுவை இதயத்திற்குப் பதிலாக தலையில் வைத்திருக்கிறாயா?அப்படி என்றால், இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

இந்தக் காட்சிகளில் ஒன்றில் நீ இருப்பாயானால், உன்னுடன் நான் ஒரு ஜெபம் செய்ய விரும்புகிறேன்.

இந்த விபரங்களில் நீ நிச்சயமாக இல்லாதிருந்தால்… நிச்சயப்படுத்திக்கொள்!

நான் உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் உனக்கு ஆச்சரியமாக இருந்தால்… ஆமாம் நான்தான்!

இன்றே உன்னுடைய இரட்சிப்பின் நாள் ஆகும்!

இப்பொழுது இயேசு கிறிஸ்துவைப் பெற தயாராக இருந்தால், உன்னுடைய கர்த்தரும் இரட்சகருமாக, உன்னுடைய எஜமானாக, உன்னுடைய முழு இருதயத்தையும் மற்றும் உனது முழு வாழ்க்கையையும் கொடுத்து ஏற்றுக்கொள்ள நீ தயாராக இருந்தால், தயவுசெய்து சொல்லு, “அது நான்தான்! நீர் என்னை விவரித்தீர், நான் இயேசுவானவரோடு எல்லாவழியிலும் போகத் தயாராக இருக்கிறேன்!”

நீ இந்த அழைப்புக்குப் பதில் கொடுத்திருந்தால், தயவுசெய்து கீழே உள்ள இணைப்பில் கிலிக் செய்யவும்

தயவுசெய்து இப்பொழுது இந்த இணைப்பை பின்பற்றவும்…
நான் உன்னை இரட்சிப்பின் ஜெபத்துக்குள் நடத்துவேன்.

[Video Version] | [Français] | [English] |[Español] | [Yoruba] | [Duetsch] | [ខ្មែរ។] | [தமிழ்]  | [বাংলা] | [Italiano] | [తెలుగు